வெள்ளி, 13 ஏப்ரல், 2018

மஷ்ரூம் 65/mushroom 65


மஷ்ரூம்  65 அசைவ பிரியர்களுக்கு ஏற்ற சைவ உணவு ஆகும்.
சிக்கனை போன்ற சுவையோடு இருப்பதால்குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள் . 

தேவையான பொருட்கள்: 

மஷ்ரூம்-1/2 கி
எண்நெய்-பொரிக்க
உப்பு-தேவையான அளவு
மைதா - 1 மற்றும் 1/2 ஸ்பூன்
கார்ன் ப்ளோர்-1 மற்றும் 1/2 ஸ்பூன்
அரிசி மாவு- 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன் 
கரம் மசாலா - 1/4 ஸ்பூன் 
சிக்கன் 65 மசாலா - 1/2 ஸ்பூன் 
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன் 
இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன் 

செய்முறை :

  • முதலில்  மஷ்ரூமை நன்கு சுத்தம் செய்து செய்து , நறுக்கி வைக்கவும் 
  • பின் இதனுடன் எண்ணெய் தவிர , மற்ற அனைத்து பொருட்களையும் சேர்க்கவும் .
  • பின் இதனை சிறிது தண்ணீர் தெளித்து (நிறைய சேர்க்க கூடாது ) கிளறி 10 நிமிடம்  வைக்கவும் .
  • எண்ணெய் சூடாக்கி ,அதில் கிளறி வைத்த மஷ்ரூமை உதிர்த்து பொரித்து எடுக்கவும் .
  • நான் இங்கு ,கலர் பவுடர் சேர்க்க வில்லை .தேவைப்பட்டால் நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம் .
  • அவ்வளவுதான் சுவையான ,மணமான , மஷ்ரூம் 65 தயார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...