திங்கள், 20 ஜூன், 2016

Homemade falooda

எங்கள் வீட்டின் all time favourite இது..கலவையான சுவை இதன் சிறப்பம்சம் .இதை இனி  எளிமையா செய்யலாம்..
 வீட்டிலே சுவைக்கலாம்...இந்த கோடையில் கூலாக இருக்கலாம் ..

தேவையான பொருட்கள் :2 க்ளாஸ் falooda செய்ய:

ஐஸ்கிரீம் -2 flavour 
 சேமியா-1/4 கப் 
சப்ஜா விதைகள்-1/2spoon 
ஜெல்லி -1 ஸ்பூன் 
டுட்டி புருட்டி - 2 spoons 
முந்திரி ,பிஸ்தா-தலா 4 ஸ்பூன் (சிறிது சிறிதாக நறுக்கியது)
ரோஸ் சிரப்- 4ஸ்பூன் 
திக்காக காய்ச்சிய பால் -1/4 கப் 
செர்ரி-2 அலங்கரிக்க
Falooda glass-2

செய்முறை :
• 2 falooda glass எடுத்துக் கொள்ளவும்.
• சேமியாவை பாலில் சிறிது சர்க்கரை சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும் .
•ஜெல்லியை நறுக்கிக் கொள்ளவும்
• சப்ஜா விதைகளை சிறிது தண்ணீர் விட்டு  15 நிமிடங்கள் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும் (ஊறியதும் சற்று அளவில் பெரிதாகும்)
• falooda glass ல் சப்ஜா ( ஊறியது) தலா இரு glass களிலும் போடவும்
• பின் சேமியா சேர்க்கவும்,பின் சுண்ட காய்ச்சிய பாலை  இரண்டு கிளாஸ்களிலும் சேர்க்கவும் .பின் ஜெல்லி,ரோஸ் சிரப் சேர்க்கவும் 
• தொடர்ந்து ஐஸ்கிரீம் சேர்க்கவும் பின் முந்திரி சேர்க்கவும்.
•மேலே மீண்டும் சப்ஜா விதைகள் ,சேமியா ,ஐஸ்கிரீம் ,ரோஸ் சிரப் விட்டு ,டூட்டி புருட்டி ,சேர்த்து செர்ரி பழம் வைத்து அலங்கரித்து உடனே பரிமாறவும் .

அட்டகாச சுவையில் falooda தயார் 
• ரோஸ் எசன்ஸ் இதில் சேர்க்கும் போது ,பிரமாண்ட சுவை தரும் 
• சப்ஜா விதைகள் உடலுக்கு மிகவும் குளிர்ச்சி தர கூடியது .மேலும் உடலுக்கு பல நற்பலன்கள் கொண்டது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...